மெலட்டூர் பேரூராட்சியில் மரம்நடும்விழா, நீர்நிலைகள் தூய்மை பணி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.


தஞ்சாவூர் ஜூலை 24

 தஞ்சை மாவட்டம், மெலட்டூர் பேரூராட்சியில்   நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மரம்நடும்விழா, நீர் நிலைகள் தூய்மை பணி மற்றும் சைக்கிள்பேரணி நடைபெற்றது. 
மெலட்டூர் பேரூராட்சி மன்ற தலைவர் இலக்கியாபட்டாபிராமன்  மரக் கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேல குளக்கரையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தூய்மையை வலியுறுத்தி சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன பேரணியும் மேல குளம் தூய்மை பணியும் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணை தலைவர் பொன்னழகுசீனு, வரிவிதிப்புக்கு உறுப்பினர் காஞ்சிதுரை,  அலுவலக முதுநிலை உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி  உறுப்பினர்கள், ஊழியர்கள் பலர்  கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை