அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்:அமைச்சர் சேகர் பாபுவிடம் மனு
அம்பை ,ஜூலை 6
பாபநாசம் மலையில் உள்ள புகழ்பெற்ற அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்று பாபநாசம் வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர்இரா.ஆவுடையப்பன்
முன்னிலையில்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடம்
அம்பாசமுத்திரம் தொகுதிகுட்பட்ட காரையார்.அருள்மிகு:
சொரிமுத்தையனார்கோவில்,
கல்யாணதீர்தம் ,சிவன் கோவில், அகஸ்தியர் அருவியில் குளிக்க
பணம் வசூலிப்பதை
நிறுத்தவும்,
மணிமுத்தாறு அருவியில் குளிக்க செல்லும் சுற்றுலா பயணிகளிடம் இரு சக்கர வாகனம், மற்றும்
மூன்று சக்கர வாகனம் , கார்களுக்கு கட்டணம் வனத்துறை வசூலிப்பதை நிறுத்த வேண்டும், அணையின் உள்ளே
உள்ள அருள்மிகு வனபேச்சியம்மன் கோவிலுக்கும் சென்று
வழிபாடு செய்யவும்,
மற்றும்,
மன்னார்கோவில் ஊராட்சியில் உள்ள
அருள்மிகு:
ராஜகோபாலசுவாமி
அருகில் உள்ள விநாயகர் கோவிலை
திறந்து மீண்டும் வழிபாடு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கவும் மனு வழங்கப்பட்டது. அப்போது உடன் அம்பை ஒன்றிய செயலாளரும் யூனியன் சேர்மன் பரணி சேகர் இருந்தார்.