தமிழக வீரர்கள் அதிக அளவில் பதக்கங்கள் வாங்க வேண்டும், சமூக சிந்தனையாளர் மற்றும்பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வாழ்த்துச் செய்தி
திருநெல்வேலி ஜுலை 28
முதுமுனைவர் அழகுராஜா பழனிசாமி
அவர்கள்வெளியீடடுள்ள அறிக்கையில் 44 ஆவது சர்வதேச சதுரங்க போட்டி சென்னையில் இன்று 28 ஜூலை 10 ஆகஸ்ட் 2022 தொடங்குகிறது
இதனை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைக்கிறார் மாண்புமிகு மாநில ஆளுனர் ஆர். என். ரவி அவர்கள், மற்றும் மாண்புமிகு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள், முன்னிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது
பல வீரர்களை ஊக்குவிக்கவும். இந்தியா சார்பில் நடத்தப்படும் போட்டியில் தமிழ்நாடு சதுரங்கத்தில் பங்குபெறும் போட்டியாளர்கள் பல பதக்கங்களை வென்றாக வேண்டும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் செஸ் ஒலிம்பியாட்டு போட்டி விளையாட்டு துறையில் ஒரு சிறந்த மைல்கள் என்பது எவராலும் மறக்க முடியாது. பதக்கம் பெறும் நாடுகளான ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் பங்கேற்க முடியவில்லை. இதனால் புதிய வீரர்கள் சாதனை படைக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்ற ன இந்தியா சார்பில் ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அணிகளை களம் இறக்க முடியும் இதன் மூலம் 15 பெண்கள் உட்பட 30 வீரர்கள் இந்தியா சார்பாக இந்த போட்டியில் பங்கேற்க முடியும். இது மட்டுமல்லாமல் ஓபன் போட்டிகளில் பங்கு வர வாய்ப்பு இருப்பதால் தமிழ்நாடு வீரர்கள் அதிக பதக்கங்களை வெற்றி பெறுவதற்கு பிரகாசமாக உள்ளது. என்னுடைய சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.