பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு
தஞ்சாவூர் ஜூலை 28
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கோபுராஜபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கன்வாடியில் கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வி தரம் குறித்தும், சுகாதாரம் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்கன்வாடி கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்தாகவும் மழைகாலத்தில் மழைநீர் கசிவு ஏற்படுவதாகவும் அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து
பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.அங்கு அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை பார்வையிட்டும், அதிகாரிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். ஆய்வின் போது கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன். ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன், மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், வருவாய்ஆய்வாளர்கள் வரதராஜன், ஸ்ரீதேவி உட்பட அரசு அதிகாரிகள், பலர் உடன் இருந்தனர்.