சாலியமங்களம் தஞ்சை நெடுஞ்சாலையில் ஞானம்நகர் பிரிவு சாலை அருகே தொடரும் விபத்துகள் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தஞ்சை மாவட்டம் ஜூலை 27
சாலியமங்களம், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கத்திரிநத்தம் ஞானம்நகர் பிரிவு சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிவேகமாக பயணிக்கும் வாகன ஓட்டிகளால் ஞானம் நகர் பிரிவு அருகே நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுகிறது. மேலும் ஞானம்நகர் பஸ்ஸ்டாப் பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் வெளிச்சமின்றி காணப்படுகிறது அதனால் ஞானம் நகரில் இருந்து நெடுஞ்சாலையை அடைய நினைக்கும் வாகன ஓட்டிகளும், சாலைய கடக்க நினைக்கும் பொதுமக்கள் பலரும் விபத்துகளை சந்தித்து வருகின்றனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஞானம்நகர் பகுதியில் தொடரும் விபத்துகளை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.