தமிழ்நாட்டில், மதுரையில் சர்வதேச செஸ் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

மதுரை ஜீலை - 3

தமிழ் மொழியினால் அடையாளப்படுத்தப்படுகிற தமிழக நிலவெளியில் மதுரை என்ற நகரம், ஒப்பீட்டளவில் தனித்துவமானது. வரலாற்றுப் பழைமையான இந்திய நகரங்களில் மதுரை நகரம் பண்பாட்டுச் சிறப்புடையது. சங்க காலத்திற்கு முன்னரே வைகை ஆற்றங்கரையில் செழிப்பான நாகரிகத்துடன் விளங்கிய மதுரை, தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று போற்றப்படுகிறது. மதுரையைச் சுற்றியுள்ள பதினான்கு குன்றுகளில் இயற்கையான குகைகளைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்த ஜைனத் துறவியர் வாழ்ந்த இடங்களில் கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையிலான தமிழிக் கல்வெட்டுகள் (தமிழ் பிராமி) காணப்படுகின்றன.
இன்றைய மதுரை நகருக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ள கீழடி என்ற இடத்தில் தொல்லியல் துறையினர் அண்மையில் நடத்திய அகழ்வாய்வுகள், வரலாற்றில் புத்தொளியைப் பாய்ச்சியுள்ளன. வைகை ஆற்றங்கரையோரம் செழித்திருந்த கீழடிப் பண்பாட்டின் காலம் கி.மு. 6 முதல் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்று கரிம மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய அமெரிக்காவிலுள்ள பீட்டா பகுப்பாய்வுச் சோதனை ஆய்வகம் அறிவித்துள்ளது. அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானங்களும் உயர் மதிப்புடைய தொல் பொருள்களும் நகரமயமாதல் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கியுள்ளதை உறுதி செய்கின்றன.

தமிழ்நாட்டில், மதுரையில் சர்வதேச செஸ் போட்டி தொடங்கி வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்ராக, மதிப்பு மிகு.பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, இந்திய அறிவியல் தொழில் நுட்ப கழகத்தால், உயர்கல்வி துறையில் உயரிய விருதான இன்ஸ்பயர்(Innovation in Science Pursuit for Inspired Research (INSPIRE) விருது பெற்றவர், மத்திய அரசால் 2011 ஆண்டு வழங்கப்பட்டது  இவ்விருது புவியியல் (Geoinformatics ) பாடத்திற்கு வழங்கப்பட்டது 

மதுரையில் துவங்கிய ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 2-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டியில் 15 நாடுகளைச் சேர்ந்த (A) Categoryயில் 202 பேர் திறந்த வகை (B) Categoryயில் 598 வீரர், மொத்தம் 800  வீராங்கனைகள் பங்கேற்றுள்ளன.
சிறப்பு விருந்தினர்க்கு பொன்னடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கி கெளரவித்தவர்       மதிப்புமிகு.திரு.R.S. திவாரி, பொதுச் செயலாளர்,Botwinnik Chess Academy, புதுடெல்லி.
2-வது ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி மதுரையில் நடைபெற்று வருகிறது. இன்று துவங்கிய இத்தொடர் வரும் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்த கொண்ட நாடுகள் இந்தியா, ரஷியா, பெலாரஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், வங்களாதேசம், ஸ்விடன், ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , அமெரிக்கா, நேபால், வியாட்னம், ஆர்மோனிய கிர்கிஸ்தான் மற்றும் கலிபோர்னியா நாடுகள் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

உலக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் நாட்டின் மதுரையே சோர்ந்த  தீபன் சக்கரவர்த்தி, ரஷியாவை சேர்ந்த போரீஸ், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெக்சி பெடரோ, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீலோத் பல்தாஸ் மற்றும் 13 கிராண்ட் மாஸ்டர்ஸ், 13 சர்வதேச மாஸ்டர்ஸ், 2 பெண் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்ட தலைசிறந்த வீரர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

10 சுற்றுகளாக நடைபெறும் இந்தத் தொடரில் முன்னிலை பெறும் வீரர்கள் கிராண்ட் மாஸ்டர் மற்றும் சர்வதேச மாஸ்டர் பட்டங்களைப் பெறத் தகுதி பெறுவர். 

இந்நிலையில் சர்வதேச அளவிலான இந்த போட்டியில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, சானிடைசர் போன்றவை சரியான முறையில் தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
இவ்விழாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் P.பிரகதீஷ், N.லேகேஷ் மற்றும்  வினோதகன், இணைச் செயலாளர்

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?