பாபநாசம் முல்லைநகர் குடியிருப்புவாசிகளுக்கு புதிய குடிநீர் கைபம்பு அமைக்கப்பட்டதற்கு பேரூராட்சிக்கு கிராமமக்கள் பாராட்டு
தஞ்சாவூர் ஜூலை - 24
தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட முல்லைநகர் குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் மற்றும் மின்சாரம் இல்லாத நேரத்தில் பயன் படும் வகையில் புதிய குடிநீர் கைபம்பு அமைக்க வேண்டுமென கிராமமக்கள் பேரூராட்சி வார்டு உறுப்பினர் கோட்டையம்மாள் மூலமாக வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து வார்டு உறுப்பினரின் முயற்சியால் முல்லைநகர் குடியிருப்புவாசிகளுக்கு பொது பயன்பாட்டிற்காக கைபம்பு அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கைபம்பு அமைத்து தரப்பட்டது. கைபம்பு அமைக்க உடனடி நடவடிக்கைகள் எடுத்த பாபநாசம் பேரூராட்சிக்கும், முயற்சி எடுத்த 13-வார்டு உறுப்பினருக்கும் முல்லைநகர் குடியிறுப்புவாசிகள் நன்றி பாராட்டினர்.