பாபநாசம் அருகே தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணிபெண் பரிதாப சாவு தனியார் மருத்துவமனையை மூடி சீல் வைக்க வேண்டும் பொதுமக்கள் ஆவேச பேட்டி
தஞ்சாவூர் ஜூலை 15
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் பரிதாபானு என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு பிரசவத்திற்காக நேற்று கஞ்சிமேடு பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் கவிதா( 24)க.பெ. மோகன்ராஜ் என்பவர் சென்றதாக கூறப்படுகிறது. கவிதாவுக்கு காலையில் ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கவிதா இறந்த போய்விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த கவிதா உறவினர்கள் மற்றும் அருகில் இருந்த கிராமமக்கள் அங்கு திரண்டனர். கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்தார். இதுகுறித்து பாபநாசம் டிஎஸ்பி பூரணி, இன்ஸ்பெக்டர் அனிதாகிரேஸி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு
விரைந்து வந்து கவிதா உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கவிதா
இறப்பு குறித்து போலீசார் மருத்துவமனை விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இதே மருத்துவமனையில் கடந்த சிலமாதத்தில் பல கர்ப்பிணிபெண்கள் இதுபோன்று உயிரிழந்ததாகவும் தவறான சிகிச்சை அளித்துவரும் இந்த மருத்துவமனையை அரசு பூட்டி உடனடியாக சீல்வைக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.