ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி குறுக்கத்துறையில் தர்பணம் கொடுக்க குவிந்த பொதுமக்கள்
திருநெல்வேலி ஜுலை 28
ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
ஆடி அமாவாசைக்கு முன்னோர்களை நினைக்கவும்,திதி கொடுக்கவும் மிகச்சிறந்த நாளாகும்.மேலும் இந்த தினத்தில்தான் நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது.
இந்த நாளில் ஆற்றோரத்திலும்,புண்ணிய தலங்களிலும்,கடலிலும் நீராடி பிதூர் தர்பணம் செய்வதால் நாம் செய்த பாவங்களும்,தோஷங்களும் விலகுவதோடு மட்டுமல்லாமல் கர்ம வினைகளும் நீங்கும்.
தாய்,தந்தையர்கள் இறந்த தினத்தையோ,திதியோ மறந்தவர்களும்,சொந்த ஊருக்கு செல்ல முடியாதவர்களும் இந்த நாளில் பெற்றோர்களை நினைத்து விரதம் இருந்தால் சிறப்பான வாழ்வும் முன்னோர்களின் ஆசீர்வாதமும் கிடக்கும்.
இன்று ஆடி அமாவாசை நாளை முன்னிட்டுதிருநெல்வேலி மாவட்டம் டவுணை அடுத்துள்ள குறுக்கத்துறை தாமிரபரணி ஆற்றில் ஆயிரம் கனக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்கின்றனர்