பாபநாசத்தில் பருத்தி கொள்முதலுக்காக நான்கு நாட்களாக காத்திருக்கும் அவலம் பருத்திக்கான விலை வெளியிடாததால் வேதனையில் விவசாயிகள்
தஞ்சாவூர் ஜுலை 15
தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடக்க உள்ள பருத்தி ஏலத்திற்கு பாபநாசம் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 5000 க்கும் மேற்பட்ட பருத்தி தாட்டுகளை எடுத்து வந்து ஒழுங்குமுறை கமிட்டியில் விற்பனைக்கு வைத்து முன்பு கடந்த மூன்று நாட்களாக காத்திருக்கின்றனர். இதில் கும்பகோணம். குடவாசல், வலங்கைமான் உள்பட வெளியூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும், விவசாயிகளும் பாபநாசம் ஒழுங்குமுறை கமிட்டிக்கு பருத்தி தாட்டுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். பாபநாசம் ஒழுங்குமுறை கமிட்டியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பருத்தியை கொள்முதல் செய்ய உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் பருத்திக்கான விலையை நிர்ணயம் செய்து சென்றுள்ளனர். இருப்பினும் இரவு ஆகியும் விவசாயிகள் கமிட்டியில் வைத்துள்ள பருத்தி தாட்டுகளுக்கான விலையை ஒழுங்குமுறை கமிட்டி இன்னும் வெளியிடாததால் பருத்தி குடோவுன் முன்பு விவசாயிகள் பசி, பட்டினியுடன் காத்து கிடக்கின்றனர். கடந்த வாரம் குவிண்டல் பருத்தி அதிகபட்சமாக 9ஆயிரத்து ஏழு நூறுவரை விலை போனது. குறைந்தபட்சமாக 8ஆயிரத்து நான்கு நூறுவரை விலை போனது. இந்த வாரம் பருத்திக்கு உரிய விலை கிடைக்குமா அல்லது குறைந்த விலை போகுமா என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.