கொத்தங்குடி ஊராட்சியில் புதிய குடிநீர் திட்டம் தொடக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பழனி தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் ஜூலை 28
அம்மாபேட்டை ஊராட்சிஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சியில், உதாரமங்களம் கிராமமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தில் குடிநீர் தேவைக்காக புதிய பைப்லைன் அமைக்கும் பணி நடைபெற்றது.
புதிய பகுடிநீர் பைப் லைன் பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் இரா. பழனி துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டார். இத்திட்ட பணிகளை விரைவில் முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.