காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பாபாநாசம் ரோட்டரி சங்கம், கிங்மேக்கர் பவுண்டேசன் சார்பில் இரத்ததான முகாம்
தஞ்சாவூர் ஜுலை-15
முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு பாபநாசம் ரோட்டரி சங்கம், கிங்மேக்கர் பவுண்டேசன், தஞ்சை இராசாமிராசுதார் மருத்துவமனை மற்றும் ஹெரிடேஜ்ரோட்டரி சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிங்மேக்கர் வெல்பேர் பவுண்டேசன் நிர்வாகிகள் பார்த்திபன்,காந்தி, பாபநாசம் ரோட்டரிசங்க தலைவர் அறிவழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் இரத்தானமுகாமை பாபநாசம் டிஎஸ்பி பூரணி தொடங்கி வைத்தார் இதில் ஏராளமான கொடையாளர்கள் இரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், கிங் பவுண்டேசன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.