பாபநாசம் அருகே வடக்குமாங்குடி கிராமத்தில் இலவச சித்த மருத்துவ முகாம்


ஜூலை 3.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடியில் தமிழ்நாடு மெடிக்கல், போகர் சித்த வைத்தியசாலை இணைந்து  நடத்திய  இலவச சித்த மருத்துவ முகாம்  நடைபெற்றது. மருத்துவர் சந்தானகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர்  கலைச்செல்விகனகராஜ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் அகரமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர்  அன்பழகன், வடக்குமாங்குடி ஊராட்சி துணை தலைவர் அப்துல்நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 இந்நிகழ்ச்சியில் வடக்குமாங்குடி அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியில் சாதிக் நன்றி கூறினார்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை