தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்க்கான மக்கள் இயக்க நிகழ்ச்சி அனுமன் நதியில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ஜூலை 24
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்க்கான மக்கள் இயக்க நிகழ்ச்சி அனுமன் நதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்காசி எம்எல்ஏவும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எஸ். பழனி நாடார் தலைமை வகித்தார். நகராட்சி சேர்மன் வள்ளி முருகன், துணை சேர்மன் சங்கராதேவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார். நகராட்சி ஆணையாளர் பாரி ஜான் நகர தூய்மை பணியில் மக்களின் பங்களிப்பு, நீர் நிலைகள் சீரமைப்பின் அவசியம், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் மரக்கன்றுகளை நட்டு, தூய்மை பணி உறுதிமொழி ஏற்று, நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள்
பாலசுப்பிரமணியன், முருகேஸ்வரி, சந்திரசேகர அருணகிரி, ராஜகுமார், உஷா பேபி, செல்வி, வெயிலுமுத்து, கல்பனா அண்ணப்பிரகாசம், ரமேஷ், அந்தோணி சுதா, ராமலட்சுமி, சிவ சண்முகம் ஞானலட்சுமி, திமுக நகர செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அன்பழகன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் பால் என்ற சண்முகவேல், தெய்வேந்திரன், வர்த்தக காங்கிரஸ் சமுத்திரம், சிறுபான்மையினர் அணி ஜெயச்சந்திரன், இலக்கிய அணி கந்தையா, அருணாசலம், திமுக நிர்வாகிகள் பூல்பாண்டியன், என்.எஸ் ஐயப்பன், சங்கர நயினார், பசுமை ஆர்வலர் ஆர்ஏ. சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்