பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கொரானா தடுப்பூசி முகாம் வழக்கறிஞர்கள், ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
ஜூலை 15
தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு, கபிஸ்தலம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய கொரானா தடுப்பூசி முகாம் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் கொரோனா பெருந்தொற்று எதிர்ப்பு தடுப்பூசியான (கோவாக்சின், கோவி ஷீல்ட்) முதல் தவணை. இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது இதில் வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும், பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் வட்டப்பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.