புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி குளத்தூர் நாயக்கர் பட்டியில் முப்பெரும் விழா...


புதுக்கோட்டை ஜூலை 15

கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு உயர்நிலைப்பள்ளி குளத்தூர் நாயக்கபட்டியில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இன்று கல்வி வளர்ச்சி நாள், ஏ. பி.ஜே அப்துல் கலாம் அறிவியல் மன்றம், தாமஸ் ஆல்வா எடிசன்  துளிர் இல்லம் துவக்க நாள் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் இரா.பெரியசாமி தலைமை வகித்தார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் குணசேகரன் வரவேற்றார். முப்பெரும் விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் முனைவர் ரெ.பிச்சைமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.சிவனாந்தம், கந்தர்வக்கோட்டை வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா, கறம்பக்குடி வட்டார செயலாளர் மு.சாமியப்பன், இல்லம் தேடிக் கல்வி வட்டார ஒருங்கிணைப்பாளர் ஈ.தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 

மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அறிவியல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல அறிவியலின் அன்றாட வளர்ச்சி, அறிவியல் கண்டுபிடிப்புகள்,தொழில்நுட்பங்கள்,  அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட நிகழ்வுகளை மாதம் தோறும் அறிவியல் மன்றத்தின் வாயிலாக மாணவர் அறிந்து கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. 

அறிவியல் கதம்பம் என்ற தலைப்பில் மாணவர்கள் இளமாறன், அட்சயா, ஆர்த்தி, கிருஷ்ணா ஆகியோர் பேசினார்கள். துளிர் இல்லம் குறித்து மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் பேசும்போது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்பது அறிவியல் மனப்பான்மையை மாணவர்கள் மத்தியில் கருத்துக்களை பரப்பி வருகிறது, மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வினாடி வினா, அறிவியல் துளிர் திறனவுறித் தேர்வு, வானியல் நிகழ்வு, அறிவியல் விழிப்புணர்வு பிரச்சாரம், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை ஆண்டுதோறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது என்றும், எதிர்காலத்தில் மாணவர்கள் அறிவியலில் சிறந்து விளங்கக்கூடிய வாய்ப்பினை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கி வருகிறது என்றும் பேசினார்.

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பேச்சு போட்டியில் வெற்றி மாணவர்கள் முதலிடம் துர்காதேவி, இரண்டாம் இடம், சுவாதிகா, மூன்றாம் இடம் அங்களேஸ்வரி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் மாணவர்கள்  கு.காவியா முதலிடத்தையும், ஐயப்யோகநிதி இரண்டாமிடத்தையும்,  செ.பிரபாவதி  மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.  பரிசுகள், துளிர் புத்தகங்கள் வழங்கப்பட்டன.மாணவர்களு வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள்  சிவசங்கரன், வெள்ளையம்மாள், சாந்தகுமாரி, தர்மாபாய், ராதா அங்காளேஸ்வரி,
சங்கர், முத்துலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.மாணவர்களுக்கு புதுகை புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
நிறைவாக  ஆசிரியை காளியம்மாள் நன்றி கூறினார்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை