புதுகை புத்தகத் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு தயாராகும் கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையங்கள்..
புதுக்கோட்டை ஜுலை 23
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆடல், பாடல், விழாக்கள், கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் 5வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 முடிய நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் தினந்தோறும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகள் பயிலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கென்று கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் இருந்தும் மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் குரும்பூண்டி, நம்புரான்பட்டி, மட்டங்கால் ஆகிய குடியிருப்புகளில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் தங்கராசு மற்றும் ரகமத்துல்லா ஆகியோர் பார்வையிட்டனர்.
தன்னார்வலர்கள் குரும்பூண்டி திவ்யா, கீதா நம்புரான் பட்டி கயல்விழி, சுகன்யா மட்டங்கால் குணவரசி ஆகியோர் புதுகை புத்தகத் திருவிழா நிகழ்வுக்காக குறுநாடகம், பட்டிமன்றம் பாடல்கள் என மாணவர்களை தயார் படுத்திவருகின்றனர். .
மையங்களை பார்வையிட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்களையும், மாணவர்களையும் பாராட்டி உற்சாகமூட்டினர். ,