தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ஜூலை.18-

தஞ்சை மாவட்டம். அம்மாபேட்டை ஒன்றியம், இரும்புதலை ஊராட்சி பகுதியில் வெண்ணாற்றின் கரையோர பகுதியில் வசித்துவரும்  கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வெண்ணாற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிட பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும்  அபாயம் உள்ளது  அதனால்  வெண்ணாற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன்பிடிக்கவோ  ஆற்றில்  பொதுமக்கள் யாரும்  இறங்க வேண்டாமெனவும் தாழ்வான பகுதியில் குடியிருந்து வரும் கிராமமக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும்  இருக்கும்படியும் இரும்புதலை ஊராட்சி மன்றம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு  எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?