சுரண்டை பஸ் ஸ்டாண்டில் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு செய்தார்.
தென்காசி ஜுலை 21
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் அதனை தடுக்கவும் காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் காவல்துறையின் உதவியை பொதுமக்கள் பெற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தென்காசி எஸ்பி கிருஷ்ணராஜ் உத்தரவிட்டார் அதன் பேரில் ஆலங்குளம் போலீஸ் டிஎஸ்பி பொன்னரசு ஆலோசனையில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திரா தேவி சுரண்டை பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார் அப்போது சப் இன்ஸ்பெக்டர்கள் வேல்சாமி, பிள்ளையார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.