புதுக்கோட்டையில் தொல்லியல் அறிஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி

புதுக்கோட்டை ஜுலை 19

புதுக்கோட்டையில் நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் மாநாட்டில் சிறந்த தொல்லியல் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தொல்லியல் கழகம் சார்பில் புதுக்கோட்டையில் இரண்டு நாள் மாநாடு நடந்தது.இம் மாநாட்டில் ஆவணம் இதழ் மற்றும் தொல்லியல் மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது.

மாநாட்டில் தொல்லியல் பணியில் ஈடுபட்டு வரும் மூத்த அறிஞர் கரு. ராஜேந்திரன் அவர்களுக்கு ஐம்பதாயத்திற்கான காசோலை விருது ஆகிய வழங்கப்பட்டன.

இளம் அறிஞருக்கான விருது ஆர்.பி.யதேஸ்குமாருக்கு 25 ஆயிரத்துக்கான காசோலை விருது வழங்கப்பட்டது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த மூத்த அறிஞர்கள் ஜெ. ராஜா முகமது கரு. ராஜேந்திரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விருதுகளை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் அவர்கள் வழங்கி பேசியது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கரு.ராஜேந்திரன் ஆ. மணிகண்டன் உள்ளிட்டோர் அழைத்த தகவலின் அடிப்படையில் நான் வழக்கு தொடர்ந்த பிறகு தான் பொற்பனைக்கோட்டையை அகழாய்வு செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் முதல் கட்ட அகழாய்வு பணியை மேற்கொண்டது. மீண்டும் இரண்டாம் கட்ட பணியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் இது நடக்கும் என நம்புகிறோம் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் பொற்பனைக்கோட்டை உள்ளடங்கிய வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம் பாராட்டப்பட்டார்.

முன்னதாக நடைபெற்ற கருத்தரங்கில் கன்னட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சி .எஸ். வாசுதேவன், தொல்லியல் கழகத்தின் நிறுவனர் எ. சுப்புராயலு, தலைவர் செந்தீ. நடராஜன் செயலாளர் ஓய்வு பெற்ற தொல்லியல் கண்காணிப்பாளர் பி. எஸ். ஸ்ரீராமன் பேராசிரியர் அ.கா. பெருமாள் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்.
மாநாட்டுக்கு வந்திருந்த தொல்லியல் ஆய்வாளர்கள் கலசக்காடு, திருக்கட்டளை, பொற்பனைக் கோட்டை ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டனர்.

மாநாட்டிற்கான ஏற்பாடுகளை வரவேற்பு குழு தலைவர் மருத்துவர் ச. ராமதாஸ் நிதி குழு தலைவர் ஜி. எஸ். தனபதி, புதுக்கோட்டை மாவட்ட தொல்லியல் கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள்  விஸ்வநாதன், ராஜாங்கம், முத்துக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை