திருநெல்வேலி மணிமுத்தீஸ்வரர் கோவிலில் முதுமுனைவர் அழகுராஜா பழனிசாமி கள ஆய்வு
தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி நதிக்கரையில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் விநாயகருக்கு ஆசியாவிலேயே தனி சன்னதி கொண்டு அமைந்திருக்கக் கூடிய கோயிலாக திகழ்கிறது.
விநாயக கடவுளின் மடியில் நீலவேணி அம்பாள் அமர்ந்திருப்பது போன்று மூலவர் காட்சி தருகிறார். பழமையான திருக்கோயில்களில் கட்டிடக்கலை எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் சித்திரை முதல் மூன்று நாட்கள் கோயில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடைபெற்றது.அதன்படி பல வருடத் துவக்கமான சித்திரை முதல் நாளான இன்று சூரிய ஒளி மூலவர் மீது விழும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டுச் சிறப்பு ஹோமமும் சிறப்புப் பூசைகளும் நடைபெறும்.
தொடர்ந்து மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சூரிய உதயம் தொடங்கிய சிறிது நேரத்தில் சூரிய ஒளி மூலவர் மீது விழுத் தொடங்கியவுடன். அதன்பின் சாமிக்கு மகா தீபாரதனை நடைபெறும்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்ட உள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர் திருக்கோயில் மணி முர்த்தீஸ்வரம் வைணவ பிரபந்த பாடசாலையில் தங்கி பயிலும் மாணவர்களுடன் எடுத்த புகைப்படம்.
சமுக சிந்தனையாளர், புவியியல் , பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, நிலத்தடி நீர் மற்றும் காலநிலை ஆய்வாளர்