உதாரமங்களம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் ஜுலை 18
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, உதாரமங்களம் அருகே தஞ்சை - விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையத்தின் திட்ட இயக்குனர் உதயசங்கர், படேல் குழுமத்தின் பொது மேலாளர் மல்லிகார்ஜூனா,ராஜேஷ்குமார் சிங், கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அஜில்அஹமது கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சையில் இருந்து சோழபுரம் வரையில் தேசிய நெடுஞ்சாலையில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் படேல் குழுமத்தின் திட்ட மேலாளர் ஷாநவாஸ், மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் பொறியாளர்கள், ஊழியர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய நெடுஞ்சாலைதுறையினர், படேல் நிறுவன மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.