நெல்லையப்பர் கோவில் தேரோட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துணை ஆணையர் சீனிவாசன் ஆய்வு
திருநெல்வேலி ஜூலை 11
திருநெல்வேலி அருள்மிகுநெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு குறித்து காந்திமதி அம்மன் நுழைவு கோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் முன் காவல்துறையினர் நேற்று அணிவகுப்பில் ஈடுபட்டனர் மேலும் தேரோட்டம் முடியும் வரை காவலர்கள், அதிகாரிகள் எந்த எந்த இடங்களில் பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டது மேலும் புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையினை நெல்லை கிழக்கு பகுதி காவல் துணை ஆணையர் சீனிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,தேரோட்டத்தை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்தும் போலிஸார் பாதுகாப்பு பணிக்கு நெல்லைக்கு வந்துள்ளனர்