பாபநாசம் அகத்தியர் மலையில் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி அவர்கள் சுவாமி தரிசனம்
திருநெல்வேலி ஜூலை 14
நேற்று பெளர்ணமியை முன்னிட்டு திருநெல்வேலிமாவட்டம், பாபநாசம் அருகில் உள்ள அகத்தியர், பொதிகை மலையில் அருள்மிகு கோடிலிங்கேஸ்வரர் மற்றும் அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் பேராசிரியர் முது முனைவர். அழகுராஜா, வேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர்
அவர்கள்
250 படிகள் மலையேறி சென்ற அவருக்கு. கோவில் பட்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பரிவட்டம் கட்டி , மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினார்கள் தொடர்ந்து கோவிலின் வரலாற்றையும், சிறப்புகளையும், கேட்டு தெரிந்து கொண்டார். கோவிலில் வரைந்து உள்ள அகத்தியர் சிலை சிவன், பார்வதி மற்றும் கோமாதாவின் சிற்பங்களையும் பார்வையிட்டார் அப்போது அங்கு இருந்த மக்களிடையே கலந்துரையாடினார்