மதுரை தெற்கு வாசலில் உள்ள மறைமலை அடிகளார் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலா|ண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
மதுரை ஜுலை – 10
மதுரை தெற்கு வாசலில் உள்ள மறைமலை அடிகளார் மாநகராட்சி ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலா|ண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. தமிழாசிரியை திருமதி உமா அவர்கள் வரவேற்புரையாற்றினார் .பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு விதிமுறைகள் குறித்து திருமதி பெனடிக்ட்சுகி பட்டதாரி ஆசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார். பள்ளி மேலாண்மைக் குழு மாநில பார்வையாளர் திரு சிவா அவர்கள் குழுவின் முக்கியத்துவம் குறித்து எளிமையாக சிறப்பாக விளக்கம் அளித்தார்.
உறுப்பினர், தலைவர், மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவராக திருமதி கோடீஸ்வரி அவர்களும் துணைத் தலைவராக திரு சரவணன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்வி ஆர்வலர்களாக திரு பாலசுப்பிரமணியன் அவர்களும் திரு மணிகண்டன் அவர்களும் பங்கேற்று மாணவர் முன்னேற்றத்திற்காகவும் மாணவர் சேர்க்கைக்கும், பள்ளி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதாகவும் கூறி எழுதுபொருள்கள் , நோட்டுபுத்தகங்களை வழங்கியும் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
47 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி எம் பானு முபாரக் மந்திரி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ,துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கினார் .அதோடு 2021 - 2022 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தேர்வில் நூறு சதவீத தேர்ச்சிக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததோடு பள்ளியின் வளர்ச்சி மற்றும் கற்றல் மேம்பாடுகளுக்கு தக்க வழிகாட்டுதலையும் உதவிகளையும் செய்வதாக கூறினார்.
தலைமை ஆசிரியை திருமதி சாந்தி அவர்கள் உறுதிமொழி வாசிக்க பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் இணைந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் .திரு ஹரிபாபு பட்டதாரி ஆசிரியர் அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது
.