புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் செயல்பாடுகள் மூலம் கற்பிக்கும் இல்லம் தேடிக் கல்வி மையத் தன்னார்வலர்கள்


புதுக்கோட்டை ஜுலை-- 10-

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம்  ஆடல், பாடல், விழாக்கள், கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவர்கள் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் வழிகாட்டுதலின் படியும், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி அவர்களின் ஆலோசனையின் படியும் கந்தர்வகோட்டை ஒன்றியம் முள்ளிக்காப்பட்டி, புது நகர், சிவந்தாம்பட்டி மற்றும் மட்டங்கால் குடியிருப்புகளில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களை  ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை உற்று நோக்கினர்.

தன்னார்வலர்கள் முள்ளிக்காபட்டி கௌசல்யா வீரலட்சுமி சங்கீதா, அனுசுதா, புதுநகர் முத்துலட்சுமி, அஸ்வினி, கவிப்பிரியா, மதுபாலா, சிவந்தாம்பட்டி ஜெயக்குமாரி,  மட்டங்கால் குணவரசி, கௌரி, சிந்து நதி ஆகியோர் மையங்களை பார்வையிட்ட கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், தங்கராசு மற்றும்  ரகமத்துல்லா ஆகியோர் தன்னார்வலர்களை பாராட்டியதுடன்,
தன்னார்வலர் - பெற்றோர் வாட்ஸ்அப் குழு உருவாக்கம், ஊக்கத்தொகை பெறப்பட்ட விபரம், மையங்களில் விழாக்கள் கொண்டாடப்பட்ட விவரம், பள்ளி மேலாண்மை குழு பங்கேற்பு மற்றும் பள்ளிகளில் உள்ள கற்பித்தல் வளங்களை பயன்படுத்துதல்  போன்ற விவரங்களைக் கேட்டறிந்தனர்.

 மாணவர்கள் கதை, விளையாட்டு, பாடல்கள் மற்றும் எளிய அறிவியல் செயல்பாடுகள் மூலம் கற்று வருவது  பெற்றோர்கள் மத்தியில் பெரும்  பாராட்டைப் பெற்றுள்ளது..

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?