சாலியமங்களம் அருகே தனியார் டைல்ஸ் உற்பத்தி நிறுவனத்தை தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் முற்றுகை
தஞ்சை ஜுலை 16
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா. சாலியமங்களம் அருகே விளை நிலங்கள் நடுவே தனியார் டைல்ஸ் உற்பத்தி நிறுவனம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய சங்கத்தினர் டைல்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளனர்.