பாபநாசத்தில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நீதிபதி, மாவட்ட ஆளுநர் பங்கேற்பு
பாபநாசம், ஜூலை.1-
பாபநாசம் ரோட்டரி சங்கம் 2022 - 2023 ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன் தலைமை வகித்து வரவேற்று பேசினார். செயலாளர் செந்தில் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் ஏழைகளுக்கு பசுமாடு, தையல் இயந்திரம், மரக்கன்றுகள், 10 மற்றும் 12 -ம் வகுப்பு முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார். பாபநாசம் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவராக அறிவழகன் செயலாளராக சிலம்பரசன் பொருளாளராக ஆனந்தன் மற்றும் அவரது குழுவினர்கள் பதவியேற்று கொண்டனர். விழாவில் பாண்டிச்சேரி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் உதவி ஆளுநர் பிரபாகரன்
கலந்து கொண்டு சங்கத்தின் புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தார். விழாவில் ரோட்டரி நிர்வாகிகளும், இயக்குனர்களும், அனைத்து கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை இயக்குனர் பக்ருதீன் அலி அகமது தொகுத்து வழங்கினார். முடிவில் செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
பாபநாசம் ரோட்டரி சங்கம் பதவியேற்பு விழாவில் ஏழைப் பெண்ணுக்கு நீதிபதி ராஜசேகர் மாவட்ட ஆளுநர் செங்குட்டுவன் ஆகியோர் தையல் மிஷினை வாங்கிய போது எடுத்த படம்.
.