வேப்பங்குளம் பகுதியில் 6.51 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி ஒன்றிய கவுன்சிலர் சுமத்ராமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் ஜீலை - 19

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம். அன்னப்பன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்குளம்  பொதுமயான சாலை மற்றும் கரம்பை கிராம இணைப்பு சாலை 
 பல வருடங்களாக கப்பி சாலையாக இருந்து வந்தது. அதனால் கிராமமக்கள் கப்பிசாலை கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனர். மயான சாலையை புதுப்பிக்க வலியுறுத்தி  வேப்பங்குளம் கிராமமக்கள் பல வருடமாக வலியுறுத்தி வந்தனர். மயான சாலை குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சுமத்ராமோகன் ஒன்றியக்குழு கூட்டங்களில் வேப்பங்குளம் மயானசாலையை தார்சாலையாக புதுப்பித்து தரும்படி வலியுறுத்தி வந்தார். இதனை தொடர்ந்து. அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் பரிந்துரையின் பேரில்  ஒன்றிய பொது நிதியில் இருந்து மயான சாலை  பணிக்கு 6.51லட்ச ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  தார்சாலை அமைக்கும் பணியை  ஒன்றிய கவுன்சிலர் சுமத்ராமோகன் நேரில் பார்வையிட்டு தார்சாலை தரமாக அமைக்கப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்தார். பல வருடமாக கப்பி சாலையாக  இருந்த சாலையை தார்சாலையாக புதுப்பிக்க முயற்சி மேற்க்கொண்ட ஒன்றியக்குழு உறுப்பினர் சுமத்ராமோகனுக்கு கிராமமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை