புதுக்கோட்டை 5-ஆவது புத்தகத் திருவிழா பிரச்சார பதாகையை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வெளிட்டார்...

புதுக்கோட்டை ஜுலை  2

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும்  5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 10 நாள்கள் நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவின் தலைவராக புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி கவிதா ராமு அவர்கள் இருக்கிறார். மாவட்டம் முழுவதும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவது சார்ந்து மாவட்ட மற்றும் வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் பிரச்சார பணிகளை செய்து வருகின்றனர்.

கந்தர்வக்கோட்டை  ஒருங்கிணைப்புக்குழுவினர் முன்னிலையில் கந்தர்வகோட்டை புத்தகத் திருவிழவிற்கான விளம்பர பதாகையை சட்டம் உறுப்பினர் எம்.சின்னதுரை வெளிட்டார் . அதனை தொடர்ந்தது கந்தர்வகோட்டை வட்டார வளமையம் அலுவலகம் பொறுப்பு மேற்பார்வையாளர் பிரகாஷ் வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆகியோர்களை சந்தித்து பதாகைகள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வரும் ஜூலை  7-ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்குபெறும் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியும், ஜூலை 12-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கிய பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில்  நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு வெற்றிபெறுபவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் ஜூலை 14–ஆம் தேதி  பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும். இதேபோல கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் ஜூலை 24-ஆம் தேதி புதுக்கோட்டை மாமன்னர் அரசு கல்லூரியில் நடைபெறும் என்றும் இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் புத்தகத் திருவிழாவில் பரிசுகளையும் பாராட்டு சான்றுகளையும் வழங்குவார் என்றும் இதில் அணைத்து மாணவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றும்  வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இந்த பிரச்சார பணியில் தொல்லியல் ஆய்வுகளக நிறுவனர் ஆ.மணிகண்டன், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், மாவட்ட இணைச்செயலாளர் கு.துரையசன், அறிவியல் இயக்க வட்டார தலைவர்l அ.ரகமதுல்லா, செயலாளர் எம்.சின்னராஜா,   ஆகியோர் செயல்பட்டனர்.

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?