பாளையங்கோட்டையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டம் துவக்கம்
திருநெல்வேலி ஜூலை 15
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச கொரானா பூஸ்டர் ஊசி போடும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைமுறைக்கு வருவதை முன்னிட்டு நமது திருநெல்வேலி மாநகராட்சியில் பாளையங்கோட்டை மார்கெட்டில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் திரு. அப்துல் வகாப் அவர்களும், வணக்கத்திற்குரிய துணை மேயர் கே ஆர் ராஜு அவர்களும், கலந்து கொண்டு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை துவங்கி வைத்தார்
இதில் பாளையங்கோட்டை மண்டல தலைவர், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.