சங்கரன்கோவிலில் வரும் 11.7.2022 மாரத்தான் போட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தகவல்
திருநெல்வேலி ஜூலை _ 6
சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஏற்பாட்டில் ஜூலை 11-திங்கட்கிழமை காலை 6:30 மணி அளவில் சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சன்னதியில் இருந்து ஆண்களுக்கும், சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து பெண்களுக்கும் மாபெரும் "மாரத்தான் நிகழ்வு " துவங்குகிறது இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். மாரத்தான் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவங்கி வைக்கிறார்
கலந்து கொள்ளும் அனைவருக்கும் டி-ஷர்ட் வழங்கப்படும் மற்றும் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும் உங்கள் வருகையை முன்னதாகவே பதிவு செய்து கொள்ளுங்கள்.
முதல் பரிசு ரூபாய் -9999 மற்றும் சான்றிதழ், பதக்கம்.
இரண்டாம் பரிசு ரூபாய் - 6969
மற்றும் சான்றிதழ் பதக்கம்.
மூன்றாம் பரிசு ரூபாய் - 4444 மற்றும் சான்றிதழ் பதக்கம்.