பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ 11,409 ஏலம் போனது
பாபநாசம் ஜூலை 30
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையிலும், மேற்பார்வையாளர் அன்பழகன் முன்னிலையிலும் பருத்தி ஏலம் நடைபெற்றது. நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பாபநாசம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 1494 லாட், சுமார் 2240.00குவிண்டால் பருத்தி கொண்டுவரப்பெற்றது. கும்பகோணம், பண்ரூட்டி, திருப்பூர்,தேனி, விழுப்புரம் மற்றும் செம்பனார்கோவில் சார்ந்த 8 வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ 2 கோடி 46 லட்சம் ஆகும்.
இதில்
தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.11409/-ம்,
குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.10189/-ம்,
சராசரி விலை குவிண்டாலுக்கு ரூ.11000/- என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்ற போது எடுத்த படம்.