கந்தர்வகோட்டை ஒன்றிய இராசப்பட்டி குடியிருப்பில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் நடத்திய பள்ளி ஆண்டு விழாI



புதுக்கோட்டை ஏப்-8

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம்  ஆடல், பாடல், விழாக்கள், கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 கந்தர்வகோட்டை ஒன்றியம் இராஜாப்பட்டி குடியிருப்பில் நான்கு இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அந்த மையங்களை சேர்ந்த தன்னார்வலர்கள் காளியம்மாள், ஷாலினி, உமா, வான்மதி ஆகியோர் ராஜாப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் பணியாற்றும் தன்னார்வலர் ஆசிரியர் சங்கர் உடன் இணைந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகரின் வழிகாட்டுதலின்படி அந்த குடியிருப்பில் ஆண்டு விழா என்ற பெயரில் மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வினை  திட்டமிட்டனர்.
இதற்காக பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டு ஆடல், பாடல், கரகாட்டம், கோலாட்டம், பட்டிமன்றம், திருக்குறள் ஒப்புவித்தல், ஆங்கில பேச்சாற்றல் திறனை வெளிப்படுத்துதல், போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

இந்நிகழ்விற்கு கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் தங்கராசு ஆகியோர் கலந்துகொண்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களையும், சலுகைகளையும் பொது மக்களிடம் எடுத்துக் கூறினார். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணம் ஆசிரியர்களா? பெற்றோர்களா? என்ற தலைப்பில் மாணவர்கள் விவாதித்த பட்டிமன்றம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த தன்னார்வலர் ஆசிரியர்களை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?