ஜல்சக்தி துறை ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் பயன்படுத்த ரூபாய் 10 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் குறித்து தமிழக அரசு உண்மைநிலையை தெளிவுபடுத்த வேண்டும் பி.ஆர்.பாண்டியன்.
தஞ்சாவூர் ஜீலை - 1
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்
பி.ஆர்.பாண்டியன்
தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது...
தமிழகத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சுமார் 340 கோடி கிரைய தொகையை விடுவிக்காமல் கரும்பு ஆலைகள் காலம் கடத்தி வருகிறது. இதுகுறித்து ஆலை நிர்வாகிகளிடம் விசாரிக்கும்போது உற்பத்தி செய்த சக்கரையை தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. அதற்கான தொகையை ஆலைகளுக்கு உரிய காலத்தில் விடுவிக்காமல் தமிழக அரசின் நிதித்துறை காலம் கடத்துவதால் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அதற்கான தொகையை வழங்க முடியாமல் தமிழகம் முழுமையிலும் சுமார் ரூபாய் 340 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக தெரிய வருகிறது.
குறிப்பாக குருங்குளம் சர்க்கரை ஆலையில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் மே மாத இறுதிவரையிலும் 21 கோடி ரூபாய் தமிழக அரசு சர்க்கரைக்கான தொகை வழங்கப்படாததால் விவசாயிகளுக்கு வழங்க முடியாமல் நிலுவையில் உள்ளதாக தெரியவருகிறது.
இதனால் கூட்டுறவு வங்கிகளில் கரும்புக்கு கடன் பெற்ற விவசாயிகள் உரிய காலத்தில் திரும்ப செலுத்த முடியாததால் வட்டி சலுகையும் பெற முடியவில்லை. மறு உற்பத்திக்கான புதிய கடன் பெறுவதிலும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
இதுபோல தமிழகம் முழுமையிலும் தனியார் சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கான தமிழக அரசு சர்க்கரைக்கான தொகையை விடுவிக்காததால் விவசாயிகளுக்கு உரிய காலத்தில் நிதியை விடுவிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வருகிறது. .
இது குறித்து தமிழக முதலமைச்சர் உடன் நடவடிக்கை எடுத்து உரிய தொகை உரிய காலத்தில் விடுவிக்க முன் வர வேண்டும்
மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்கிற ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்து நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கும், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயம் செய்யஇச்சட்டம் வழிவகுக்கும். மேலும் குடிநீர் பராமரிப்பு, நிலத்தடி நீர் மேம்பாடு என்கிற பேரில் கார்ப்ரேட் நிறுவனங்களிடம் தாரைவார்க்கப்படும் என இதனை இதனை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதால் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது திடீரென இன்று
30.06.2022 முதல் 30.09.2022க்குள் வீடுகள் மற்றும் வேளாண் உட்பட நிலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணையம் மூலமாக ரூபாய் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.மறுக்கும் பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்படும் என்கிற அறிவிப்பு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது உண்மையா?. இது குறித்து தமிழக அரசு மவுனம் காப்பது ஏற்கத்தக்கதல்ல. சமீபகாலமாக மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சிக்குதோ ?என்கிற சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு தனது நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.2012 தண்ணீர் சட்டத்தின் மூலம் கட்டண விதிப்பதை தடுத்து நிறுத்த தமிழக முதலமைச்சர் முன் வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கூட்டுறவு வங்கிகளில் ஊழல் முறைகேடு செய்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பல இடங்களில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுவதோடு, விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கடன் வழங்கப்படாமல் வங்கிகள் . இதனால் கடன் பெற முடியாத விவசாயிகள் தொடர்ந்து போராடியும் பலன் இல்லாத நிலை தொடர்கிறது.குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சமயன்குடிகாடு, பெருமாக்கநல்லூர் உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களில் முறைகளில் ஈடுபட்டவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட அளவிலான அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். இதே நிலை தமிழ்நாடு பூராவும் தொடர்கிறது. எனவே இதுகுறித்து தமிழக கூட்டுறவுத்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து முடக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களை மறு செயல்பட்டுக்கு கொண்டு வரவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களை பணி நீக்கம் செய்திடவும் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார.