தெரு நாயின் தலையில் சிக்கிய பிளாஷ்டிக் குடம் பலநாட்களாக உணவின்றி தவிக்கும் பரிதாபம்?
தஞ்சை ஏப் 25
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பகுதியில் சாலையில் தெருநாய் ஒன்று பிளாஷ்டிக் குடம் தலையில் சிக்கியவாறு பலநாட்களாக சாலையில் சுற்றி திரிந்தவாறு காணப்படுகிறது தலையில் பிளாஷ்டிக் குடம் மாட்டப்பட்ட நிலையில் உள்ளதால் நாயால் உணவு சாப்பிட கூட முடியாமல் உணவின்றி கடந்த ஒருமாதத்திற்கு மேல் மாதத்திற்கு நாய் அங்கும் இங்கும் சுற்றியபடி சாலையில் சுற்றி திரிந்து உயிருக்கு போராடி வருகிறது கிராமத்தினர் சிலர் தெருநாயின் தலையில் சிக்கிய ககுடத்தை அகற்ற முயற்சித்தும் நாய் நிற்காமல் ஓடிவிடுவதாக கிராமமக்கள் கூறுகின்றனர்.
தெருநாய் குறித்து அப்பகுதியை சேர்ந்த கிராமமக்கள் கூறியதாவது
இரும்புதலை பகுதியில் உள்ள தெருநாய் ஒன்று தண்ணீர் குடிக்க அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் வைத்திருந்த பிளாஷ்டிக் குடத்திற்குள் தலையை விட்டுள்ளது. தலையை மீண்டும் எடுக்க முடியாமல் போகவே நாய் பயந்து போய் அங்கும், இங்கும் ஓடி மோதி கொண்டதில் குடத்தின் அடிபாகம் உடைந்து போனது ஆனால் குடத்தின் மேல்பாகம் நாயின் கழுத்தில் வசமாக மாட்டி கொண்டதால் அதனால கழட்ட முடியவில்லை நாங்களும் கழுத்தில் மாட்டிய குடத்தின் அடிபாகத்தை அகற்ற முயற்சி செய்து பார்த்தோம் ஆனால் நாய்கிட்ட போனாலே பயந்து ஓடிவிடுகிறது கழுத்தில் குடம் மாட்டிக்கொண்டதால் அதனால சாப்பிட கூட முடியல ரோட்டில பல நாட்கள் பசியோடு அங்கும் இங்கும் சாலையில் பயந்து ஓடியவாறு உள்ளது. ரோட்டில் போற வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிடுமோ என பயத்தில் இருக்கிறோம். வனவிலங்கு பாதுகாப்புதுறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணியினர் எப்படியாவது நாயின் கழுத்தில் சிக்கிய பிளாஷ்டிக் குடத்தை அகற்றி நாயின் உயிரை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.