சாலியமங்களம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
தஞ்சை ஏப்-25
.
தஞ்சை மாவட்டம். அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை தலைவர் முத்துச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணிசுரேஷ்குமார், பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், நாகராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் மதுமதிமணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.