திருப்பரங்குன்றம் கோவில் பணியாளர்களுக்கு நிரந்தர பணி ஆணை
மதுரை ஏப்-18
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள மதுரைதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்த வந்த திரு. கிருஷ்ணமூர்த்தி, திருமதி சோனையம்மாள், ஆகிய இருவருக்கும் 110 விதியின் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் உத்தரவின் பேரிலும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் பேரிலும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் துணை ஆணையர் செயல் / அலுவலர் சுரேஷ் அவர்கள் இன்று நிரந்தர பணி நியமனத்திற்கான உத்தரவை வழங்கினார் மேற்படி உத்தரவு வழங்கியதற்கு திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாண்புமிகு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் அவர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களுக்கும் இத்திருக்கோயில் துணை ஆணையர் செயல் அலுவலர் சுரேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்