பாபநாசத்தில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பாபநாசம் மே.18
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஒன்றிய நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சாமு தர்மராஜ் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பாரதி கலந்துகொண்டு மாவட்ட மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசனை வழங்கி பேசினார் கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் கண்ணன்,முன்னாள் நிர்வாகிகள் பரமசிவம் உள்பட மாவட்ட, ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.