தெருநாயின் தலையில் சிக்கிய பிளாஷ்டிக் குடம் பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் பத்திரமாக அகற்றப்பட்டது பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பாராட்டு
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பகுதியில் சாலையில் தெருநாய் ஒன்று பிளாஷ்டிக் குடம் தலையில் சிக்கியவாறு பலநாட்களாக சாலையில் சுற்றி திரிந்து வந்தது தலையில் பிளாஷ்டிக் குடம் சிக்கி கொண்டதால் நாயால் உணவு சாப்பிட கூட முடியாமல் உணவின்றி கடந்த ஒருமாதத்திற்கு மேல் நாய் அங்கும் இங்கும் சாலையில் சுற்றியபடி சாலையில் சுற்றி திரிந்து உயிருக்கு போராடி வந்தது தெருநாயின் தலையில் சிக்கிய குடத்தை அகற்ற கிராமத்தினர் சிலர் முயற்சித்தும் நாயின் தலையில் மாட்டிய பிளாஷ்டிக் குடத்தை அகற்ற முடியவில்லை. இதுகுறித்து ஊராட்சிமன்ற தலைவர் பாலாஜி உதவியுடன் வனவிலங்கு பாதுகாப்புதுறையினர் , தீயணைப்பு மீட்பு பணியினர், கால்நடைதுறையினர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
எப்படியாவது நாயின் தலையில் சிக்கிய பிளாஷ்டிக் குடத்தை அகற்றி நாயின் உயிரை காப்பாற்றி தரவேண்டும்என கிராமமக்கள் கேட்டுக்கொண்டனர். தெருநாயின் தலையில் சிக்கிய குடத்தை அகற்ற யாரும் முன்வராததால் இதுகுறித்து தகவல் மெலட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் கவனத்திற்கு சென்றது. தெரு
நாயின் தலையில் சிக்கிய குடத்தை அகற்ற செயல் அலுவலர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். பேரூராட்சி ஊழியர்கள் இருவர் திருக்கருகாவூர் அரசு கால்நடைமருத்துவர் ஆகியோர் இரும்புதலை கிராமத்திற்கு விரைந்தனர். அங்கு தலையில் பிளாஷ்டிக் குடத்துடன் சுற்றித்திரிந்த நாயை பேரூராட்சி ஊழியர்கள் லாவகமாக பிடித்தனர். பின்னர் நாயின் தலையில் மாட்டியிருந்த பிளாஷ்க் குடம் கட்டிங் பிளேடு உதவியுடன் காயம் எதுவும் வெட்டி அகற்றப்பட்டது.
ஒரு மாத காலமாக தலையில் மாட்டிய குடத்துடன் உணவு உண்ண முடியாமல் உயிருக்கு போராடிய நாயின், தலையில் சிக்கிய பிளாஷ்டிக் குடத்தை பேரூராட்சி ஊழியர்கள் ஒருமணி நேரம் போராடி பத்திரமாக அகற்றினர். பின்னர் நாயின் உடல்நலத்தை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார். நாயின் உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாயின் தலையில் சிக்கிய பிளாஷ்டிக் குடத்தை அகற்ற முயற்சி மேற்கொண்ட மெலட்டூர் பேரூராட்சி செயல்அலுவலர் குமரேசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், கால்நடை மருத்துவர் சௌந்தராஜன் ஆகியோருக்கு கிராமமக்கள் நன்றி பாராட்டினர்.