ஒலிம்பிக்கில் மூன்று தங்க பதங்ககளை வென்ற மதுரை மாற்று திறனாளி மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி பாராட்டு

மதுரை ஏப்-19

பிரேசில் நாட்டில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத் திறனாளிகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் இரகுபந்து போட்டியில் ஒlற்றையர் , கலப்பு இரட்டையர் மற்றும் குழு போட்டி ஆகிய மூன்று பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த , மதுரை மாநகராட்சி அவ்வை மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி  ஜெர்லின் அணிகாவை நேரில் அழைத்து வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி பாராட்டியதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை ஊக்கத்தொகையாக வழங்கினார்.

தங்கப்பதக்கம் வென்ற ஜெர்லின் அணிகாவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை நேரில் சந்திக்க  ஏற்பாடு செய்ததுடன் , மாணவி 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதவும் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை