மெலட்டூர் அடைக்கல அன்னை ஆலய அலங்கார தேர்பவனி திருவிழா ஏராளமான கிராமமக்கள் பங்கேற்பு
தஞ்சாவூர் ஏப்-23
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அடைக்கல அன்னை ஆலயத்தின் அலங்கார தேர்பவனி திருவிழா நடைபெற்றது.
மெலட்டூர் அடைக்கல அன்னை பெருவிழா கடந்த 18 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . தினசரி மாலையில் ஜெபமாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றன நான்காம் நிகழ்ச்சியாக நேற்று மாலை ஜெபமாலை, நவநாள், திருப்பலி மெலட்டூர் பங்குதந்தை சகாயபெகின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தஞ்சை இளையோர் பணிக்குழு செயலர் பங்கு தந்தை அலக்ஸ் திருப்பலி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மறையுரை வழங்கினார். தொடர்ந்து அன்பின் விருந்து நிகழ்ச்சியும், இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர்பவனி நிகழ்ச்சியும் நடைபெற்றது ஆடம்பர தேர்பவனி முக்கிய வீதிகளை சுற்றி ஆலயம் வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெருவிழாவுக்கான ஏற்பாடுகளை
பங்கு தந்தை சகாய பெகின், உதவி பங்கு தந்தை கார்மல்பவுன்ராஜ் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.