அய்யம்பேட்டையில் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி கிராமமக்கள் சாலைமறியல் போராட்டம்.
தஞ்சாவூர் - ஏப் 18
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா வையச்சேரி, சூலமங்களம் ஊராட்சி பகுதியில் தஞ்சை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வையச்சேரி, சூலமங்களம் கிராம சாலைக்கு சர்வீஸ் சாலை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இது நாள் வரை சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் நெடுஞ்சாலை துறையினர்
எடுக்காத நிலையில் நேற்று காலை அய்யம்பேட்டை பகுதியில் தஞ்சை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கிராமமக்கள் வையச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சத்தியாசுர்ஜித், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கனகராஜ் உள்பட பொரக்குடி, புண்ணியநல்லூர், சூலமங்களம், வையச்சேரி கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு
நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.