காலை தரிசனம் ஸ்ரீநரசிம்மர் தரிசனம் !!
"திருமால் பெருமைக்கு நிகரேது...
உந்தன் திருவடி நிழலுக்கு
இணையேது..!
பெருமானே உந்தன் திருநாமம் ..
பத்து பெயர்களில் விளங்கும் அவதாரம் ..!
நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்... நரசிம்ம அவதாரம்..!!"
சுபகிருது வருடம் :
சித்திரை மாதம் 31 ஆம் நாள்....!
மே மாதம் : 14 ஆம் தேதி :
(14-05-2022)
இன்று
சனிக்கிழமை !
சூரிய உதயம் :
காலை : 06-03 மணி அளவில் !
சூரிய அஸ்தமனம் :
மாலை : 06-24 மணி அளவில் !
இன்றைய திதி :
வளர்பிறை திரியோதசி !
மதியம் 02-00 மணி வரை அதன்பிறகு சதுர்த்தசி !!
இன்றைய நட்சத்திரம் :
சித்திரை ..
மாலை 04-15 மணி வரை அதன்பிறகு சுவாதி !!
இன்று
சம நோக்கு நாள் !
யோகம் :
மாலை 04-15 மணிவரை நன்றாக இல்லை ! அதன்பிறகு சித்தயோகம் !!
சந்திராஷ்டமம் :
இன்று
மீன ராசிக்கு சந்திராஷ்டமம் !!
ராகுகாலம் :
காலை : 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!
எமகண்டம் :
மதியம் : 01-30 மணி முதல் 03-00 மணி வரை !!
குளிகை :
காலை : 06-00 மணி முதல் 07-30 மணி வரை !!
சூலம் : கிழக்கு !
பரிகாரம் : தயிர் !!
கரணம் :
மதியம் 12-00 மணி முதல் 01-30 மணி வரை !
நல்ல நேரம் :
காலை :
10-30 மணி முதல் 12-00 மணி வரை !
மாலை :
05-00 மணி முதல் 07-00 மணி வரை !
இன்றைய சுப ஓரைகள் :
சுக்கிர ஓரை :
காலை : 10-30 மணி முதல் 11-00 மணி வரை !!
புதன் ஓரை :
காலை : 11-00 மணி முதல் 12-00 மணி வரை !!
இன்றைய சிறப்புகள் :
இன்று
ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி !!
வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் மறையும் நொடியில் ..பகலுமின்றி, இரவுமின்றி...
மாலை அந்திப் (சந்தியா வேலை)பொழுதில் நரசிம்மர் அவதரித்தார்...!
(இந்த ஆண்டு இன்றுதான் ஸ்ரீநரசிம்மர் ஜெயந்தி)
இறைவன் ...
எங்கும் நிறைந்திருக்கிறான் ...
தூணிலும் இருக்கிறான் ...
துரும்பிலும் இருக்கிறான் ...
பக்தன் கூப்பிட்டால் ..
உடனே ஓடோடி வந்து காப்பான் என்ற தாத்பரியமே நரசிம்ம அவதாரம் !
தன் பிள்ளை ப்ரஹ்லாதனை தந்தை
ஹிரண்யகசிபுவே கொல்ல முற்பட்ட போது,
அவனை கொன்று தம் பரம்பக்தனை காக்கும் பொருட்டு நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்..!
அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...
இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...
இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்..!
தனிமையில் நின்ற ஹிரண்யகசிபுவை பகவான் அப்படியே தூக்கி மடியில் வைத்து...
குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர்..!
அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை..!
லக்ஷ்மி அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை...!
முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள்..!
அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான ப்ரஹ்லாதனுக்கு மட்டுமே இருந்தது...!
தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர்.!
ப்ரஹ்லாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்..!
தன்னருகே வந்த ப்ரஹ்லாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். சாந்தி ஆனார் !!
நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் பகையும் ஏற்படாது..!
நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்...!
கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடுகிறார்களா?
நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகிவிடும்..!
நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை...!
வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்...!
நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம்..!
ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்..!
வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது..!
நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால்,பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்..!
நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக ...
பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்...!
நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
‘அடித்த கை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு..!
அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்..!
நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்..!
இன்று ஆலயம் சென்று
ஸ்ரீ நரசிம்மப் பெருமாள் வழிபாடு செய்ய வேண்டிய நாள்.. !
இன்று
வீட்டிலும் ஸ்ரீநரசிம்மர் படத்தை வைத்து அலங்கரித்து சாதாரண பானகம் மற்றும் கல்கண்டு வைத்து வணங்கலாம் !
"மாதா ந்ருஸிம்ஹா
பிதா ந்ருஸிம்ஹா..
ப்ராத ந்ருஸிம்ஹா
ஸகா ந்ருஸிம்ஹா..
வித்யா ந்ருஸிம்ஹா
த்ரவினம் ந்ருஸிம்ஹா..
ஸவாமி ந்ருஸிம்ஹா
ஸகலம் ந்ருஸிம்ஹா..
இதோ ந்ருஸிம்ஹா
பரதோ ந்ருஸிம்ஹா..
யதோ யதோ யாஹி
ததோ ந்ருஸிம்ஹா..
ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம்..!
ப்ரபத்யே இது ந்ருஸிம்ஹ ப்ராப்தி..!