தங்கம் வென்ற மதுரை மாநகர காவல் துறையினர்:
மதுரை ஏப்-25
திருவனந்தபுரத்தில் நடந்து வரும் 4வது தேசிய மூத்தோர் விளையாட்டு போட்டி 18.05.2022 துவங்கி 22.05.2022 அன்று நிறைவு பெற்றது. இதில் வயது வாரியான போட்டிகளில் அனைத்து மாநிலங்களிலும் பங்கேற்றனர். இப்போட்டியில் மதுரை திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமா மாலா அவர்கள் இறகுபந்து போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கமும், மற்றும் இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றார். 45 வயதிற்கு மேற்பட்டோருக்கான வட்டு எறிதலில் 28 பேர் போட்டியில் AHTU தலைமை காவலர் திருமதி. விஜயலட்சுமி தங்கம் வென்றார். இருவரையும் இன்று 23.05.2022 காவல் ஆணையர் திரு. T.செந்தில்குமார் IPS., அவர்கள் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.