மே-3 "உலக பத்திரிகை சுதந்திர நாள்""பத்திரிகை சுதந்திரத்தை பாது காக்க" சபதம் ஏற்போம் -ஏ.ஐ.யு.ஜெ


 சென்னை-3   ,

உலக பத்திரிகை
சுதந்திர நாளான
இன்று(மே-3)  "பத்திரிகை சுதந்திரத்தை    பாது காக்க"   
சபதம் ஏற்போம்
என்று,தமிழக
பத்திரிகை-ஊட வியலாளர்களை
ஏ.ஐ. யு.ஜெ அழைக்கிறது.
இது குறித்து சங்கத்தின்
தலைவர்  ஆர்.ரவிக்குமார்
வெளியிட்ட அறிக்கையில்
கூறி இருப்பதாவது:                                                                                                                        உலக நாடுகளுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமைக்கான, சுதந்திரத்தை, பிரகடனப் படுத்தி, ஆண்டுதோறும் மே மாதம்-ம் 3ம்  தேதியை,
"உலக பத்திரிகை
சுதந்திர நாளாக"
ஐ.நா. அறிவித்து,
கடந்த,1993-ம் ஆம் ஆண்டு முதல் உலகம்  முழுவதும்
கொண்டாடப்பட்டு
வருகிறது.

பிரிட்டிஷ்,இந்தியாவில்தான்  சுதந்திர போராட்டதை, ஒடுக்க, அந்த
செய்திகள்
மக்களை  
சென்று அடையாமல்
தடுக்க,
பத்திரிகைகளுக்கு வரம்புகள் விதிக்கப்பட்டது. 

அப்போது ஆளுநர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பத்திரிகை சுதந்திரத்தை
நசுக்கும்வகையில் பல்வேறு விதிகளை அமல்
படுத்தினார். 

1781 ஆம் ஆண்டு "வங்காள கெஜட்" என்ற பத்திரிகையை ஹேஸ்டிங்ஸ் கண்டித்ததுடன், அதன் ஆசிரியரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
                                                                                                                                                                 .பின்னர் 1799 ஆம் ஆண்டு பத்திரிகைகளுக்கான புதிய சட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 

அதன்படி, பத்திரிகையின் ஆசிரியர், உரிமையாளர் பற்றிய விவரங்கள்,
முகவரி ஆகியவற்றை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும், பத்திரிகையை அச்சிடுபவரின் பெயரை, அச்சகத்தின் விவரத்தை பத்திரிகையில் வெளியிட வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் பத்திரிகை
வெளியிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்பது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
                                                                                                                                                               அதன் பின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்ததும் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பராமரிக்கப்பட்டது. எனினும், இந்தியா உட்பட,உலக அளவில் பல்வேறு நாடுகளில் பத்திரிகை சுதந்திரம் என்பது கேள்விகுறியாகவே இருந்து வந்தது. 

1986 ஆம் ஆண்டு கொலம்பிய பத்திரிகையாளர் கிலெர்மோ கானோ இசாசா என்பவரை அவரது அலுவலகம் முன்பாக வைத்தே, அடையாளம் தெரியாத நபர்கள் படுகொலை செய்தனர். 

அவரின் படுகொலைக்குப் பின்னரே, பத்திரிகை சுதந்திரம் தொடர்பான விவாதங்கள் சர்வதேச அளவில் வலுப்பெற்றது.
                                                                                                                                                              இதைத் தொடர்ந்து பத்திரிகை சுதந்திரத்துக்கான குரல் ஐ.நா.வில் ஓங்கி ஒலிக்கத்
தொடங்கி அதற்கான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டன.

1993 ஆம் ஆண்டு பத்திரிகை சுதந்திர நாளை
கொண்டாடுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் மே 3ஆம் தேதி
 'உலக பத்திரிகை சுதந்திர தினமாக" கொண்டாடப்பட்டு வருகிறது.
                                                                                                                                                                அந்நாளில் உலக அமைதிக்காகவும், பேச்சு சுதந்திரத்திற்காகவும் போராடும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படுகின்றன. இந்த கவுரவத்துக்கு உரிய நபர்களை 14 பேர் கொண்ட குழு தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நம் நாட்டில் 2014ம்
ஆண்டுக்குபிறகு
பத்திரிகை சுதந்திரம் என்பது
கேள்விக்குறியாகி வருகிறது.

மத்திய,மாநில
அரசுகளின் செயல்பாடுகளை,
விமர்சனம் செய்ததால்,உ.பி யில் இதுவரை 12
 பத்திரிகையாளர்கள் கொல்ல பட்டுள்ளனர்,48பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
2021 அக்டோபர் நடந்த லக்கிம்பூர்
கலவரத்தில் 1 பத்திரிகையாளர்
சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் எழுத்தாளர்,கல்வியாளர் சாகித்திய
அக்கடாமி பரிசு
பெற்ற,கல்புர்கி எழுத்தாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இதில் பாஜக
ஆளும் மாநிலங்கள் தான்
முன்னிலையில்
இருக்கின்றன.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு
ஆட்சியில்,100
அவதூறு வழக்குகள் பதிவு
செய்யப்பட்டு,தி.மு.க. ஆட்சியில்,
முதல்வர் மு.க.ஸ்டாலின்,
உத்தரவால் அனைத்தும்,வாபஸ் பெறப்பட்டுள்ளது.
நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது போடப்பட்ட
தேசவிரோத வழக்கு, பத்திரிரிகையாளர்களின் கடும் எதிர்ப்பால் நீதிமன்றமே இவ்வழக்கை ரத்துசெய்தது.

இந்நிலையில்,
நம் நாடு முழுவதும்,மத்திய, மாநில அரசின் நடவடிக்கைகளை விமச்சிக்கும்
பத்திரியாளர்கள்,
மனிதஉரிமை போராளிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அறிவுஜீவிகள்,               தேச விரோதம், உல்பா, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு
சிறையில் உள்ளனர்.

இதே  வழக்கில் 2018. இல் கைது செய்யப்பட்ட திருச்சியை சேர்ந்த ஸ்டெண் சுவாமி என்கிற பாதிரியார்,2021இல் சிறையில் இறந்து விட்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.

உபா வழக்கில் 2020 இல் கைது செய்யப்பட்டு,        இன்று வரை சிறையில் இருக்கிறார்,கல் வியாளர்,எழுத்தாளர்,மனிதஉரிமை
போராளி,அம்பேத்கர் பேரன்,ஆனந்த
டெம்டுல்தே என்பது குறிப்பிட
தக்கது.

இந்திய அரசியல்
அமைப்புசட்டம்
பிரிவு19 வழங்கியுள்ள,அடிப்படை சுதந்திரமான, எழுதுரிமை, பேச்சுரிமை, கருத்துரிமைகளை
காக்க,"உலகபத்திரிகை சுதந்திரதினத்தில்
சப்பதமேற்போம்"
என தமிழகம் முழுவதும் உள்ள
பத்திரிகை,ஊடக
வியலாளர்களை,
ஏ.ஐ.யு.ஜெ அறைகூவி அழைக்கிறது.

இவ்வாறு அந்த
அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை