வேப்பங்குளம் காளியம்மன்கோயில் பால்குட திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.பாபநாசம்.மே.27
பாபநாசம்.மே.27
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அன்னப்பன்பேட்டை அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காளியம்மன் கோயில், அருள்மிகு அய்யனார் ஆலயத்தின் பால்குட திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு காலை அய்யனார் ஆலயத்தில் இருந்து கிராமவாசிகள், பக்தர்கள், பால் குடம், காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் சுற்றி கோயில் வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஆண், பெண் என ஏராளமானோர் கலந்து கொண்டு பால்குடம், காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழா நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சுமத்ராமோகன், வார்டு உறுப்பினர் தீபாரஜினிகாந்த் ஆகியோர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டனர்.
இரவு சக்தி கரகம் எடுத்து மேள, தாளம்,வாண. வேடிக்கையுடன் வீதியுலா காட்சியும், மறுநாள் இரவு சினிமா ஆடல், பாடல் நிகழ்ச்சியும் ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் நீராட்டுவிழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மை, முக்கியஸ்தர்கள், கிராமவாசிகள் செய்து இருந்தனர்