20ஆண்டுகளாக பாசனத்திற்கு தண்ணீரை பார்க்காத கிராமங்கள் வெண்ணாற்றில் படுக்கை அணை கட்டினால் தான் விவசாயம் செய்யமுடியும் விவசாயிகள் வேதனை தகவல்

தஞ்சை ஏப்-29

தஞ்சை மாவட்டம், ,பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை
வருவாய் கிராமத்தில்   750 ஹெக்டர் விவசாய நிலங்கள் உள்ளன இவை  அனைத்தும் பிள்ளை  வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றன. பிள்ளை வாய்க்காலில்  பாசனத்திற்கு தண்ணீர் வந்து  20 வருடத்திற்கு மேல்  ஆகிறது  வாய்க்காலில் தண்ணீர் வராததால்  மின்மோட்டார் பம்புசெட் உதவியுடன் விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.  ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் பிள்ளை வாய்க்காலில்  தண்ணீர் வராது ஆற்றின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து போய்விட்டதாலும் வாய்க்கால் மட்டம் உயர்ந்து போனதாலும் பாசனத்திற்கு தண்ணீர் வருவது பல ஆண்டுகளாக  நின்று போய்விட்டது.  கொத்தங்குடி அருகே   உதாரமங்களம் பகுதியில் பிள்ளை வாய்க்கால் தலைப்பு உள்ள பகுதியில் வெண்ணாற்றில் படுக்கை அணை கட்டினால் தான் ஆற்றில்  நீர்மட்டம் உயர்ந்து பிள்ளை வாய்க்காலில் தண்ணீர் ஏறி இரும்புதலை வருவாய் கிராமம் பாசன வசதி பெறும் என  விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர் எனஇரும்புதலை ஊராட்சி மன்ற தலைவர் 
பாலாஜி தெரிவித்தார்


Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை