திருப்பரங்குன்றம் உண்டியல் எண்ணும் உழியர்களுக்கு K.P.S. உணவக உரிமையாளர் ராமச்சந்திரன் அவர்கள் மாதம்தோறும் உணவு அன்பளிப்பு
மதுரை - ஏப் 29
ஸ்ரீ முருகனின் முதற் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருகோவிலுக்கு தினமும் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகிறார்கள் அதை எண்ணும் பணியில் ஈடுபடும் உழியர்களுக்கும், ஓதுவார்பாடசாலை மாணவர்களுக்கும், KPS உணவகத்தில் இருந்து அதன் உரிமையாளர் ராமச்சந்திரன் அவர்கள் மாதம் தோறும் காலை சிற்றுண்டியும், மதியம் சாப்பாடும், தனது பங்களிப்பாக கடந்த சில ஆண்டுகளாக செவ்வனே செய்து வருகிறார் இது கோவில் ஊழியர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது