இரு தரப்பினரிடையே மோதல் காவல்துறை வழக்கு பதிவு விடுதலை களம் கட்சி கண்டனம்
ஏப்ரல்-16 விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் திருச்சுழி அருகே உள்ள கே வாகைகுளம் கிராமத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் வீடுகள் மீது நேற்று சமூக விரோதிகள் சிலரால் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் இந்த சமூக விரோத செயலை விடுதலைக்களம் கட்சி மிக வன்மையாக கண்டிப்பதாகவும் இச்சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தமிழக காவல்துறை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
கே.வாகைகுளத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் விடுதலைக்களம் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் நாளை (17/04/2022 ) விடுதலைக்களம் கட்சியின் தலைவர் கொ.நாகராஜன் கே.வாகைக்குளம் கிராமத்திற்கு நேரில் சென்று அங்கு வசிக்கும் பாதிக்கப்பட்டுள்ள தொட்டிய நாயக்கர் சமூக மக்களை சந்தித்து அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்து மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிக்கப்படும் என தெரிவித்துள்ளார்